குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - விருச்சிகம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - விருச்சிகம்

வாழ்க்கை வாழ்வதற்காக என்று உணர்ந்து செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு. வரும் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் சூழ்நிலை அனைத்து மாறும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல், உங்களின் உடல் நலனின் முன்னேற்றம் எளிதில் எதையும் ஜெயிக்கும் வல்லமையும் உருவாக்கத்திற்கு தகுந்த வலிமையும் பெறுவீர்கள். பத்தாம் பார்வையாக சனி பார்ப்பதால்.. இதுவரை தொழில் அமைய பெறாதவர்கள் தொழில் அமையப் பெறுவீர்கள். 
 
சொன்னபடி நடந்து கொள்ள வேண்டுமென்தற்காக வழிமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். புதிய தொழில்நுட்பப் பயிற்சிகளில் கலந்து கொண்டு புதிய விடயங்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். விளையாட்டுத் துறையினர் போட்டிகளில் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். 
 
கலைத்துறையினருக்கு பல வாய்ப்புகளும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அமையும். விவசாயத்தில் நல்ல மழை காரணமாக விளைச்சல்கள் அதிகரிக்கும். சாதனைகளை புரிந்து பாராட்டுதல்களை சிலர் பெறுவீர்கள். முக்கிய விருத்தினராக கலந்து கொள்வீர்கள். சகோதரர்கள் விடயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சாதுர்யமாக பேசி எண்ணியதை விரைவில் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
 
காலத்திற்கு தகுந்த சில மாற்றங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். காவல் பணியில் இருப்பவருக்கு வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். வாகனங்களில் செல்லும் போது அவசரமின்றி செல்வது நல்லது. தானதர்மங்கள் செய்து வர உங்களின் தொழிலில் அதிக லாபம் பெறுவீர்கள். பொது வாழ்வில் கடுமையாக உழைத்து முன்னேறுவீர்கள்.
 
பரிகாரம்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வழிபாட்டு வர சகலமும் காரியமும் வெற்றியை தரும்.